செவ்வாய்க்கிழமை (04) மாலை கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது யுனைடெட் பொருட்கள் சேவை (UPS) விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
உள்ளூர் நேரப்படி மாலை 5:15 மணியளவில் நடந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மூன்று பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் தரையில் இருந்த 11 பேர் காயமடைந்தனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு ஏற்பட்ட இந்த விபத்தின் தீப்பிழம்புகள், விமான நிலையத்தை ஒட்டிய ஒரு தொழில்துறை நடைபாதையில் தரையில் தொடர்ச்சியான தீப்பிழம்புகளைப் பற்றவைத்தன.
UPS plane crash in Louisville, Kentucky: At least 7 dead, 11 injured as plane crashes while departing Louisville airport – ABC11 Raleigh-Durham
At least 4 dead, 11 injured in UPS plane crash and explosion at Kentucky airport
இதனால் அதிகாரிகள் இரவு முழுவதும் விமான நிலைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் சிறிது நேரம் மேலே எழும்பியபோது இடது இறக்கையில் தீப்பிழம்புகள், புகை வெளியேறுவது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது.
பின்னர் விபத்துக்குள்ளாகி ஒரு பெரிய தீப்பந்தமாக வெடித்தது.
விமான விபத்துக்குப் பின்னர் பல கட்டிடங்களுக்கு தீப்பிரவின.
விபத்தில் காயமடைந்த 11 பேரும் தற்சயம் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

