உலகில் பல்வேறு வகையான கடற்கரைகள் காணப்படும் நிலையில், இந்தோனேஷியாவின் பாலி முக்கியமான சுற்றுலாத் தளமாகும். பாலியில் அமைந்துள்ள பாண்டவா கடற்கரை ஒரு சிறப்பு வாய்ந்த கடற்கரை ஆகும்.
இந்த கடற்கரைக்கு செல்லும் பாதை வித்தியாசமானது. மலையை வெட்டி உருவாக்கப்பட்ட சுமார் 300 மீட்டர் நீள பாதையின் இருபுறமும், 40 மீட்டர் உயரம் கொண்ட சுண்ணாம்பு சுவர்கள் காணப்படுகின்றன.
மேலும், இந்த சுவர்களில் பாண்டவர்கள் மற்றும் அவர்களது தாய் குந்தி தேவியின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வெள்ளை மணலுடன் சுத்தமாகக் காணப்படும் இந்த கடற்கரை, அதன் அமைதியான சூழ்நிலையால் ரகசிய கடற்கரை (Secret Beach) என்றும் அழைக்கப்படுகிறது.