தங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் போட்டியிடவிருந்த சகல தொகுதிகளிலும் அதிக ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.