Super singer மேடையில் யாழ்ப்பாணத்து சிறுமி செய்த மனக்கணிப்பு சோதனை நடுவர்களை மிரள வைத்துள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது.
தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்த சீசனில் திறமையான குழந்தைகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த திருவிழா சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் பங்கேற்ற யாழ்ப்பாண சிறுமி பிரியங்காவிற்கு நடுவர்கள் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளனர்.
அதாவது தொகுப்பாளர்கள் நினைக்கும் இலக்கத்தை பிரியங்கா கண்டுபிடித்து கூறியுள்ளார். இவரின் கணிப்பு திறமை ஒட்டுமொத்த அரங்கையும் மிரள வைத்துள்ளது.
அத்துடன் பிரியங்காவின் திறமையை நடுவர்கள் பாராட்டி பேசியுள்ளார். இவரின் கணிப்பு திறமை இது போன்று இருக்கும் சிறுவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டவும் அமைந்துள்ளது.