இலங்கை சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி காணும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை 684,960 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாடு வந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் மட்டும் (முதல் 26 நாட்களில்) 191,982 சுற்றுலாப் பயணிகள் வருகைமுழு ஆண்டுக்கான இலக்கு – 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளதாவது,
இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் சுற்றுலாத்துறை பொட்டென்ஷியலை மேம்படுத்துவதற்காக பன்னாட்டு சந்தைகளில் இலங்கையின் சிறப்புகளை விளம்பரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சுற்றுலாத்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.