எகொட உயன தொடருந்து நிலையத்தில் அமைந்திருந்த பயணிகள் மேம்பாலம் இன்று இரவு திடீரென இடிந்து விழுந்ததால், மருதானையிலிருந்து காலி நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இந்த திடீர் விபத்தில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட இடிபாடுகள் தொடருந்து தடத்தில் விழுந்துள்ளன.
மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்பு கருதி அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தனியார் மின்சார ஊழியர்கள் அதனை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் காரணமாக, தொடருந்து நிலையத்திற்குள் பொலிஸார் பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளனர். பயணிகள் மாற்று பாதைகள் வழியாக திருப்பி விடப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பாதைகளை விரைவில் செயல்படுத்தும் நோக்கில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.