தமிழர் விடுதலை கூட்டணி இழைத்த வரலாற்று தவறின் காரணமாவே பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக 47 ஆண்டுகளாக தமிழர்கள் இன்னல்களை அனுபவித்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது எந்தவொரு தரப்பினரும் அதனை எதிர்க்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.