இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 16ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கை இராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களையோ, போர்க்குற்றங்களையோ மேற்கொள்ளவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். இராணுவம் தேசியத்தின் பெருமையும் பாதுகாவலருமானதும் எனக் கூறிய அவர், “அவர்கள் ஒருபோதும் மரணிக்கப் போவதில்லை” என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
“இது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல” என அவர் சுட்டிக்காட்டியதோடு, இது அனைத்து இலங்கையர்களும் ஒரு சுதந்திரமான நாட்டைப் பெறத் தமக்குத் தரும் உரிமையை உறுதிப்படுத்தும் போராகவே இருந்தது என்றும் கூறினார்.
“ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் இறுதி தியாகத்தால் நமது தாயகம் பாதுகாக்கப்பட்டது. எனது நிர்வாக காலத்திற்குப் பிறகும், நாடு ஒரே சிங்கக் கொடியின் கீழ் இறையாண்மையுடன் இருக்க வேண்டும்.”மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தொடர்ந்தும் கூறினார்.
அத்துடன், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அச்சமின்றி, சம உரிமையுடன் வாழக்கூடிய சமாதானமான இலங்கை ஒன்றை உருவாக்குவதே இலங்கை மக்களின் நீண்ட நாள் கனவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.