தொழில் கோரும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு மாத்திரமின்றி ஏனைய சில அமைச்சுகளிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் கலந்துரையாடி நிரந்தர தீர்வினை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் நிறைவடைவதற்குள் இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வழங்கப்படும்.
தொழில் கோறும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.
இது ஒரு தேசிய பிரச்சினையாகக் காணப்படுகின்ற போதிலும் அவசரமாகத் தீர்வுகளை முன்வைக்க முடியாது.
கடந்த அரசாங்கத்தினால் இந்த பிரச்சினைக்கான தீர்வுகள் முன்வைக்கப்படாமையினாலேயே இந்த விடயம் தொடர்பில் தற்போது ஆராய வேண்டியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.