அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதோடு புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத வரி விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.