பரிசுப் பொதிகளை வழங்குவதாகக் கூறி, கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, இலங்கை தகவல் தொடர்பாடல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, இது தொடர்பில் தமக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தகவல் தொடர்பாடல் நிறுவனததின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான போலி செய்திகளின் ஊடாக மக்களின் முக்கியமான தரவுகள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் ஊடுருவப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான போலி இணைப்புகளின் ஊடாக, தனிப்பட்ட தரவுகளை திருடும் வகையில், மென்பொருள்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் போலியான குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு, இலங்கை தகவல் தொடர்பாடல் நிறுவனம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.