பாடசாலை மாணவர்கள் கல்வி உபகரணங்களை பெறுவதற்காக அரசாங்கம் வழங்கிய ரூ. 6,000 பெறுமதியான வவுச்சரின் செல்லுபடி காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
முந்தைய கால எல்லை: மார்ச் 31, 2024 , புதிய கால எல்லை: ஏப்ரல் 30, 2024 இத்தீர்மானம் மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டது.
மாணவர்கள் கல்வி உபகரணங்கள், புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை உரிய வர்த்தக நிலையங்களில் பெறலாம்.,கல்வி துறை மற்றும் அரசு இணைந்து வழங்கும் ஆதரவு திட்டம்,அரசாங்க அங்கீகரித்த கடைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்
மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்ளலாம்.