நாடளாவிய ரீதியில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அரிசி பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த வருடம் பெரும்போகத்தின் போது 2.9 மில்லியன் மெற்றிக் டன் நெல்லை அறுவடை செய்வதற்கு அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நெல் அறுவடையானது 2.4 மில்லியன் மெற்றிக் டன்னாக குறைவடைந்தது.

