பாட்டியை அடித்து கொலை செய்துவிட்டு அவரின் உடலின் மேலேறி மந்திரம் படித்த இளைஞன் ஒருவரின் செயற்பாடு மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம், தமிழ்நாட்டின் உளுந்தூர்பேட்டை பகுதியில் இடம்பெறுள்ளது.குறித்த கல்லூரி மாணவர், கேம் விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது பாட்டியை அடித்து கொன்று உடல் மீது அமர்ந்து மந்திரம் படித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,உளுந்தூர்பேட்டை பகுதியிலுள்ள கொனாலவாடி கிராமத்தை சேர்ந்த 21 வயதான மேற்படி இளைஞர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரிஒன்றில் ஆண்டில் கற்றுவந்துள்ளார்.
பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான இவரின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்ட அவரின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்தனர்.பின்னர் சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய குறித்த இளைஞர் சில நாட்களுக்கு முன்பு தனது பெரியப்பா மற்றும் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு சென்ற சந்தேக நபரான இளைஞர் மீ்ண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்துள்ளார்.நள்ளிரவில் அனைவரும் உறங்கச் சென்ற பிறகு பெரியப்பா வீட்டில் இருந்து பாட்டி வீட்டிற்குச் சென்ற அவர் பப்ஜி விளையாட்டில் வருவது போல அரைகுறை ஆடையுடன் கிராமத்தின் வீதிகளில் ஓடியுள்ளார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 85 வயதான தனது பாட்டியை ஆவேசமாக தாக்கி படுகொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவரது உடலை தூக்கி வந்து சாலையில் வைத்து அதன் மீது அமர்ந்தபடி சில மந்திரங்களை படித்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சந்தேகநபரான இளைஞனை மடக்கிப்பிடித்து எலவனாசூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.பின்னர் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பல இளைஞர்கள் மனநலம் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, உயிரும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.