நாட்டில் சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (20) வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைக்கு அமைய, ஒரு சிகரெட் விற்பனைக்கு 75% வரி விதிக்கப்பட வேண்டும் எனவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
அதோடு சிகரெட் வரி குறித்து பாராளுமன்றத்தில் மிக விரைவில் தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதன்போது வலியுறுத்தினார்.