போரில் காயமடைந்து, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் தேவைப்படும் முன்னாள் படைவீரர்களுக்காக, ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி அலுவலக வாகனவளாகத்தில் இன்று (20) சிறப்புப் நிகழ்வு ஒன்றின் மூலம் 5 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின்படி ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இந்நிகழ்வில், தொடர்புடைய வாகன ஆவணங்களை ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க வழங்கினார்.
வாகனங்கள் வழங்கப்பட்ட இடங்கள் மற்றும் பயன்பாடு: அநுராதபுரம், கம்புருபிட்டிய, பாங்கொல்ல ஆகிய இடங்களில் உள்ள சுகாதார ஓய்வு விடுதிகள், அத்திடிய மிஹிந்து செத் மெதுர, ராகம ரணவிரு செவன ஓய்வு விடுதி ஆகியவை
மேற்கண்ட இடங்களில் தங்கி சிகிச்சை பெறும் முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக இந்த வாகனங்கள் பயன்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளன.
ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் 2 மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப் வண்டிகள், 1 நிசான் பெட்ரோல் ஜீப், 1 டொயோட்டா கரினா கார், 1 டொயோட்டா ஹிலக்ஸ் வாகனம்
முன்னாள் வீரர்களின் நலனுக்காகவும், அவர்களின் சுகாதார சேவைகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்கும், இந்த வாகனங்களின் ஒப்படைப்பு ஒரு முக்கியமான அடையாளமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.