தமிழர்களின் துயரமான வரலாற்றுப் பகுதியாகிய முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, லண்டன் நகரில் அமைந்துள்ள ஒரு தமிழ் கடையில், நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி (Kanji) பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், தமிழீழத்தின் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்தலும், புதிய தலைமுறையினருக்குப் பிறந்த மண்ணின் துயர வரலாற்றை எடுத்துரைத்தலும் ஆகும்.
கடைக்கு வருகைதந்த பல்வேறு தேசத்தினருக்கும், கஞ்சியுடன் சேர்த்து முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதன் மூலம், சர்வதேச மக்களிடையே தமிழர்களின் வரலாற்றுத் துயரைப் பகிர்ந்துகொள்வதும், அவர்களின் உணர்வுகளை பரப்புவதும் முயற்சிக்கப்பட்டது.
இவ்வாறான நிகழ்வுகள், உலகம் முழுவதும் தமிழ் மக்களின் நினைவு, எதிர்ப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன.