உள்ளாட்சித் தேர்தல் அச்சிடும் பணிகள் நடைபெறும் அரச அச்சக திணைக்களத்திற்கு, இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாதுகாப்பில் பொலிஸார் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த முறை சிறப்பு அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மார்ச் 20 முதல், அரச அச்சக திணைக்களத்திற்கு பொலிஸாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
தேர்தல் தொடர்பான ஆவணங்கள் & வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாதாரண பாதுகாப்பு போதாது என அரச நிறுவனம் கருதியுள்ளது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

