வரலாற்று சிறப்புமிக்க “சிறி தலதா வழிபாடு”, 16 வருடங்களுக்குப் பின்னர், இன்று (ஏப்ரல் 18) ஆரம்பமாக உள்ளது. இந்த வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வு, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்க உள்ளார். மேலும், பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூட நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்காக கொழும்பிலிருந்து கண்டி வரை சிறப்பு புகையிரத சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து மற்றும் அஸ்கிரி மஹாநாயக்க தேரர்கள், மற்றும் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், இந்த வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிபாடுகள், ஏப்ரல் 27 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளன.
இன்று (18ஆம் தேதி) பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை பக்தர்கள் தலதா புனித தந்த தாதுவை வழிபடலாம்.நாளை (ஏப்ரல் 19) முதல் ஏப்ரல் 27 வரை, தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த வழிபாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு வழங்கப்படும்.