முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழில் மகேஸ்வரி நிதியத்துடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் கைதாகலாம் என்ற ஊகத்தை எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
1996 முதல், வடமராட்சி கிழக்கில் கடற்கரை பகுதிகளில் மணல் கொள்ளை என்பது மகேஸ்வரி நிதியின் பெயரில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாரிய பண மோசடி நடைபெற்றது என குற்றச்சாட்டு.மணல் கொள்ளை நடவடிக்கைகளின் பின்னணி டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு இருந்ததாக பல தரப்புகள் எப்போதும் எழுப்பி வந்துள்ளன.
நல்லாட்சி காலத்தில் (2015–2019) உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் கீழ் இந்த நிதியுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய ஜனாதிபதி அனுர திசாநாயக்க முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் முன்னாள் அமைச்சர் பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) ஏற்கனவே கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது முன்னைய அரசியல் கூட்டாளிகளையும் சிக்க வைக்கும் என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என சுமந்திரன் கருதுகிறார்.