மகாராஷ்டிரா தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் நிகழ்ந்த பரிதாபம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
20 வயதான வர்ஷா என்பவர், தனது பிஎஸ்சி இறுதியாண்டு கல்வியை முடித்து, நேற்று (06) நடைபெற்ற பிரியாவிடை விழாவில் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். பேசும் போது புன்னகையுடன் தன்னை தானே உற்சாகப்படுத்திய வர்ஷா, திடீரென முகம் வெளிர்ந்து மயங்கி மேடையில் விழுந்தார்.
உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் வர்ஷா உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
மருத்துவ அறிக்கையின்படி, மாரடைப்பே வர்ஷாவின் மரணத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது. வர்ஷா எட்டு வயதில் இதய அறுவை சிகிச்சை செய்திருந்ததாகவும், அதற்குப் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக அவர் முழுமையாக ஆரோக்கியமாக இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி பலரது மனங்களை பெரிதும் பாதித்துள்ளது.

