சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையைப் காண அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார்.
இன்று விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்டு இதனை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு சீனா வழங்கும் கடன் உத்தரவாதம் போதாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்காக IMF தரநிலைகளுக்கு பொறுத்தமான நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதத்தை பெற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை இலங்கை மிக விரைவில் பெறும் என எதிர்பார்ப்பதாக உதவி இராஜாங்கச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
உதவி இராஜாங்க செயலாளர் நேற்று (31) இலங்கை வந்தடைந்த நிலையில் அவர் இன்று (01) இரவு கட்டார் நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளார்.