யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வருவதால், மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த நீராகாரங்களை அதிகம் அருந்த வேண்டும்.அதிகபட்ச வெப்பநிலைக்கு ஏற்ப, நிழலான இடங்களில் இருக்க வேண்டும்.நீண்ட நேரம் நேரடி வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் சிறப்பு கவனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா இந்த அறிவிப்பை வழங்கினார்.
வெப்பச்சலனம் காரணமாக வலிப்பு, தாகம், தசை இறுக்கம், தலையிழுப்பு போன்ற வெப்பநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் கண்டிப்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.