யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட நீர்ச்சத்து இழப்பால் ஆசிரியை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் நீர்ச்சத்து இழப்பால் ஆசிரியை உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நேற்று முன் தினம் (15) மதியம் கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த 53 வயது ஆசிரியையே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த ஆசிரியை மாணவர்களுக்காக கூடுதல் வகுப்பு நடத்த பாடசாலைக்கு சென்ற நிலையில் நீரிழப்பு காரணமாக மயங்கி விழுந்து பின்னர் மாரடைப்பால் இறந்ததாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை கடந்த வாரமும் யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் இதேபோல் அதிக நீர்ச்சத்து இழப்பால் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் நடத்திய பின்னர் ஆசிரியையின் உடலை இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியையின் மரணம் பாடசாலை சமூகத்திடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.