ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயல்பட்டிருந்தால், உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னதாகவே நடத்தி முடிக்க முடிந்திருக்குமென தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், “சித்திரை புத்தாண்டுக்கு முன்பே தேர்தலை நடத்தும் நோக்கத்துடன் இருந்தோம்” என்று கூறினார்.பாதீட்டு திட்டம் தொடர்பான விவாதம் காரணமாக, எதிர்க்கட்சியினர் தேர்தலை பிற்போட கோரியதை அவர் குறிப்பிடினார்.இதன் அடிப்படையில், தேர்தல்கள் ஆணைக்குழு மார்ச் 21 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை மே மாதத்திற்கு ஒத்திவைத்தது.
உரிய முறையில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தால், தற்போதைய நேரம் மற்றும் வளங்களை தேர்தல் பணிகளுக்காக செலவழிக்க வேண்டியிருக்காது என்றார்.தற்போதைய சூழ்நிலையில், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி டிசம்பர் மாதத்துக்குள் பாரிய வேலைத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.
அரசாங்கம் 8 இலட்சம் குடும்பங்களுக்கு மானிய விலையில் நிவாரணப் பொதிகளை வழங்க திட்டமிட்டிருந்தது.ஆனால், தேர்தல்கள் ஆணைக்குழு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக இந்த உதவித் திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். வருங்காலத்தில் தேர்தல்கள் குறித்த நடவடிக்கைகள் தெளிவாகவும் திட்டமிட்ட வகையிலும் நடைபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.