க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை நிறைவடைந்த பின்னர், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் எடுத்த அதிசயமான மற்றும் நெகிழ்ச்சியான செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய பரீட்சை முடிந்ததும், மாணவர்கள் பரீட்சை மண்டபத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை வணங்கி ஆசி பெற்றனர்.
பரீட்சை முடிந்த உடனே, பாடசாலையை மறக்காமல் மாணவர்கள் திரண்டு சிரமதானத்தில் ஈடுபட்டு, மண்டபங்களை சுத்தம் செய்தனர்.
மாணவர்கள் தான் கற்றுத் தீர்ந்த பாடசாலையை மதிப்பாகக் கருதி, பள்ளிக்கூட மண்டபம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ததுடன், அங்கு விழுந்து வணங்கியும் சென்றனர்.
இந்த மாணவர்களின் செயல் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இளைஞர்கள் தங்கள் கல்வி நிலையத்துக்கு காண்பித்த மரியாதையின் மிகச்சிறந்த உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.