அடுத்த மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறைகள் காரணமாக, இன்று (04.04.2025) முதல் தேர்தல் முடியும் வரை தபால் ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறும் என்றும், எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் நடவடிக்கைகளை விரைவாகவும் தடையில்லாமல் முடிக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.