உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் கருத்துரைத்த அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.