2025 ஏப்ரல் 18 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாட்டளாவிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முப்படைத் தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இத்தகவலை தெரிவித்ததுடன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றார்.
ஈஸ்டர் தினங்களில் தேவாலயங்கள், வழிபாட்டு இடங்கள் மற்றும் பொது இடங்களில் பக்தர்களின் பாதுகாப்பு முதன்மையாகக் கருதப்படும். இதற்காக, விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் பல்வேறு நிலைகளில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடளாவிய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், முப்படைகள், பொலிஸ், மற்றும் உளவுத்துறை ஒருங்கிணைந்து செயற்படுவார்கள். கடந்த கால அனுபவங்களை நினைவில் கொண்டு, எந்தவொரு அசம்பாவிதத்துக்கும் இடமின்றி, பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட உள்ளன.