பொதுவாக ஒருவருடைய whatsapp சாட்ஸ்களை இன்னொருவருக்கு நாமே Transfer செய்து கொள்ளலாம்.
இதனை செய்வதற்கு முன்னர் நம்முடைய whatsapp சாட்ஸ்களை கிளவுடில் Backup எடுத்து வைத்திருப்பது அவசியம்.
இந்த செயன்முறை பயனர்களுக்கு கடினமாக இருப்பதால் எளிதான செயல்முறையாக மாற்றுவதற்கு whatsapp திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் பழைய சாதனத்தில் இருந்து புதிய சாதனத்திற்கு மெசேஜ்களை இலகுவாக Transfer செய்வதற்கு கூடிய விரைவில் புதிய அம்சமொன்று அமுலுக்கு வரவுள்ளது.
அந்த வகையில், whatsapp-ல் அந்த புதிய அம்சம் என்னவென்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
QR கோடு பயன்படுத்துவதன் மூலம் வாட்ஸ்அப் சாட்ஸ்கள் மற்றும் பிற கண்டென்டுகளை ஒரு சாதனத்தில் இருந்து இன்னொரு சாதனத்திற்கு மாற்றலாம். இந்த option-ஐ WhatsApp நிறுவனம் வெளியிட்டுள்ளது. இனி டிரைவ் அக்கவுண்டில் சேமித்து வைப்பதற்கான தேவையை இது முழுவதுமாக நீக்கலாம்.
ஒருவர் ஒரு போனில் இருந்து மற்றுமொரு போனுக்கு மாற்ற நினைக்கும்போது முதலில் வாட்ஸ்அப் மெசேஜ் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
WhatsApp-ல் புதிய QR கோட்டை உருவாக்கவும். இதன் மூலம் உங்களுக்கு Message- ஐ இடமாற்றம் செய்யலாம்.
வாட்ஸ் அப்பின் QR கோட்டை ஸ்கேன் செய்யும் போது, Transfer செயல்முறை தானாக ஆரம்பித்துவிடும்.
இந்த அம்சம் 2.24.9.19 என்ற Android beta வெர்ஷனில் மேம்பாட்டு நிலையில் தற்போது உள்ளது.
கூடிய விரைவில் இந்த செயன்முறை பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைக்கப்பெறும். பணம் செலுத்தி கூகுள் டிரைவ் வாங்க முடியாதவர்கள் புதிய சாட் டிரான்ஸ்ஃபர் செய்ய இது சிறந்த வழியாக இருக்கும்.
இருப்பினும், QR கோடு மூலமாக நடக்கவிருக்கும் இந்த Transfer எப்படி வேலைச் செய்யும் என சரியாக உறுதியாகவில்லை. மாறாக குறித்த செயன்முறைக்கு கட்டாயம் இரண்டு சாதனங்களும் ஒரே Wi-Fi நெட்வொர்க்கில் இணைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.