க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.