கொழும்பு 10, மாளிகாவத்தையில், தாயும் புதியபிறந்த சிசுவும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்று மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்த பெண் வீட்டின் கழிப்பறைக்கு முன் தரையில் முகம் கீழாக கிடந்ததாக அவரது கணவர் தெரிவித்திருக்கிறார்.பெண்ணின் மைத்துனர் தகவல் அளித்ததை தொடர்ந்து வீடு சோதனை செய்யப்பட்டபோது, உடலிலும் தரையிலும் அதிக அளவு இரத்தம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை அவரது காலடியில், தொப்புள் கொடி வெட்டப்படாமல், ஒரு துணியில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது.இருவரும் முச்சக்கர வண்டி மூலம் பொரளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது, தாய் மற்றும் சிசுவின் மரணத்துடன் தொடர்புடைய முழுமையான விசாரணை பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.