மருதானை சோப்பேவின் மகன் என்று அழைக்கப்படும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ பொலிஸாரால் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக காணியின் உரிமையாளருக்கும் அவரது மகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கித்சிறி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட கித்சிறி ராஜபக்ஷ இன்று (29) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.