ஐ.பி.எல். தொடரின் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 104 ஓட்டங்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா அணி, 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை பெற்று எளிதாக வெற்றிபெற்றது. இதன்மூலம் சென்னை அணி சொந்த மைதானத்திலேயே தோல்வியை கண்டது.