சென்னை முகப்பேரில் காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக எழுந்த தகராறில் பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் 2சென்னையில் வசித்து வருகின்றார். அவரது வீடு சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பாரி தெருவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் வீட்டின் அருகே தேநீர் கடை ஒன்று உள்ள நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி கயல்விழியின் மகன் தனது மனைவியுடன் காரில் கடைக்கு வந்தார்.
அப்போது காரை தர்ஷனின் வீட்டு முன்பாக நிறுத்தியதாகவும், அது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
நேற்று (3) கார் பார்க்கிங் பிரச்சனை தொடர்பாக நீதிபதியின் மகன் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதில் காயமடைந்த நீதிபதி மகன் ஆத்திசூடி மற்றும் மகேஷ்வரி ஆகிய இருவரும் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீதிபதி மகன் ஆத்திசூடியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரின் சகோதரர் லோகேஷ் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்க்ஷன் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தர்ஷன் சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்திருந்ததுடன் விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.