தலதா மாளிகை யாத்திரைக்காக மோசடியான முறையில் நிதி திரட்டும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய மகா விகாரையின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
தலதா மாளிகை யாத்திரைச் செயல்பாடுகள் அரசாங்கம், கண்டி மாநகர சபை மற்றும் தலதா மாளிகை நிர்வாகத்தினரின் பொறுப்பில் உள்ளது.வேறு எந்த தனிப்பட்ட குழுக்களுக்கும் அதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை.தலதா மாளிகை யாத்திரை அடுத்த மாதம் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும்.
சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் தவறான தகவல்களுடன் நிதி திரட்டும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தலதா மாளிகை நிர்வாகம் தெரிவித்துள்ளது.தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ நிதியளிக்க வேண்டாம் என்று அஸ்கிரிய மகா விகாரையின் பிரதி பதிவாளர் ஆனந்த தேரர் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.
அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பொது மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.