பிக் பாஸ் சீசன் 8ல் முதல் ஐந்து இடத்திற்கு வரும் போட்டியாளர்களின் பட்டியலை பிக் பாஸின் முன்னாள் போட்டியாளரான விசித்ரா அறிவித்துள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் யார் வெற்றிபெறுவார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான விசித்ரா டாப் 5 போட்டியாளர்களை அறிவித்துள்ளார். இவர் பிக் பாஸ் 7ல் கலந்து கொண்டு 95 நாட்களுக்கு மேல் விளையாடி இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தவர் ஆவார்.
விசித்ரா டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 98வது நாளில் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தன்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவரை பார்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் விசித்ரா, தற்போது நடைபெற்று வரும் 8வது சீசனில் டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் என்பதை தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் 5வது இடத்தை பவித்ராவுக்கு கொடுத்ததுடன், அமைதியாகவும், சூழலை லாவகமாக கையாண்டு விளையாடுவதாகவும் கூறியுள்ளார்.
நான்காவது இடத்தில், டிக்கெட்டை வென்று முதல் பைனல் போட்டியாளராக சென்று ரயானை வைத்துள்ளார். ரயான் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டினை விளையாடி வருவதாகவும், அவர் சிறந்த ஆட்டக்காரர் என்றும் கூறியுள்ளார்.
மூன்றாவது இடத்தினை ஜாக்குலினுக்கு கொடுத்ததுடன், எப்படிப்பட்ட சவால்களையும் நேரடியாக சந்திக்கும் போட்டியாளர்கள் கூறியுள்ளார்.
இரண்டாவது இடத்தை முத்துக்குமரனுக்கும், முதல் இடத்தை தீபக்குக்கும் கொடுத்துள்ளார். விசித்ராவின் பட்டியலில் விஷால், சௌந்தர்யா, அருண் இவர்கள் மூன்று பேர் மட்டும் வரவில்லை.
விசித்ரா இவர்களுக்கு இடம் கொடுக்காததால், அவர்களுக்கு தகுதியே இல்லையா என, அவர்களின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.