பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கழுதையொன்று உள்நுழைவதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட 7 மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது.நெதர்லாந்தில் ஒளிபரப்பான Big Brother ஷோவை அடிப்படையாக கொண்டு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி உருவாக்கம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட சில பிரபலங்களை தெரிவு செய்து அவர்களை வீட்டில், வெளி உலகின் தொடர்பின்றி போட்டியாளர்களை வசிக்க செய்வதோடு, அவர்களுக்கு விதவிதமான Taskகள் கொடுத்து பிரபலங்களின் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வருவார்கள்.
இதனை தொடர்ந்து, 100 நாட்கள் வரை வீட்டில் அனைத்தையும் சகித்து கொண்டு இருக்கும் போட்டியாளர் டைட்டில் வின்னராக வாக்குகள் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுவார்.
இந்த நிலையில், இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார். 18வது season கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதுடன் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
19 ஆவது போட்டியாளராக கழுதையொன்று கலந்து கொள்ளவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.கத்ராஜ் (Gadhraj) என பெயரிடப்பட்டுள்ள அந்த கழுதையை போட்டியாளர்கள் தான் பராமரிக்க வேண்டுமாம்.
அத்துடன், வழக்கறிஞர் குணரத்னா சதாவத்ரே இந்த கழுதையை கொண்டு வந்ததாகவும், கழுதை பால் குறித்து ஆராய்ச்சி செய்யப்போவதாகவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் ஒன்று தொகுப்பாளர் சல்மான்கானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.