ஜப்பானைச் சேர்ந்த 70 வயதான இல்லஸ்ட்ரேட்டர் ரியோ டட்சுகி (Ryo Tatsuki), தனது துல்லியமான முன்கணிப்புகளால் “புதிய பாபா வங்கா” என்ற பெயரை பெற்றிருக்கிறார். தற்போது, அவர் வெளியிட்டுள்ள புதிய கணிப்பு உலக அளவில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ரியோ டட்சுகியின் கூற்றுப்படி, ஜூலை 2025 இல் ஜப்பானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கடலுக்கு அடியில் ஒரு பெரிய விரிசல் ஏற்படவிருக்கிறது. இது, 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமியைவிட மூன்று மடங்கு அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய பேரழிவு தரும் சுனாமியாக இருக்கும் என அவர் எச்சரிக்கிறார்.
இக்கணிப்பு வெளிவந்ததையடுத்து, ஜப்பானின் சுற்றுலாத் துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ஜப்பானுக்கான விமான பயண முன்பதிவுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக சுற்றுலா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுனாமி எதிர்பார்ப்பின் பீதி, பயணிகளை பின்வாங்க வைக்கிறது.
ரியோ டட்சுகியின் கடந்த கணிப்புகள் சில உண்மைஉணர்த்தும் வகையில் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக 1995 கோப் பூகம்பம், 2011 டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமி, பாடகர் ஃப்ரெடி மெர்குரியின் மரணம்
இவற்றை முன்னதாகவே துல்லியமாக கணித்திருந்ததாக கூறப்படுகிறது. இவரது கணிப்புகள் தற்போது ஜப்பானில் மட்டுமன்றி, உலகளாவிய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.
“புதிய பாபா வங்கா” என ஜப்பானியர்கள் அழைக்கும் ரியோ டட்சுகி, சுயமாக வெளியிட்ட கையேட்டில் தான் கனவில் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவ்வெல்லாம் எழுதியதாகவும், அவை தொடர்ந்து நிஜமாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் 2025 ஜூலை பேரழிவு தொடர்பான தகவல்கள் பரவி வருகின்றன. உண்மை நிலவரம் என்ன என்பதை உறுதி செய்ய அதிகாரப்பூர்வ இயற்கை பேரழிவு ஆய்வுகள் மற்றும் தரவுகளுக்கு அடுத்தடுத்து கவனம் செலுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது வெறும் சித்திர கலைஞரின் கனவா? அல்லது உண்மையில் வரவிருக்கும் பேரழிவுக்கு எச்சரிக்கையா? என்பதை நேரமே பதிலளிக்க வேண்டியுள்ளது. ஆனால், ஜப்பான் உள்ளிட்ட பசிபிக் வளைகுடா நாடுகள், தற்போது மிகுந்த அதிர்விலும் விழிப்பிலும் உள்ளன என்பது உறுதி.