உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலமானதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. இதையடுத்து உலக தலைவர்கள், அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவர்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர், 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவஞானி நாஸ்ட்ரடாமஸ் மற்றும் 12-ஆம் நூற்றாண்டின் அயர்லாந்து ஆன்மிக ஞானி மலாச்சி ஆகியோர் கூறியுள்ள கணிப்புகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு: போப்பின் மறைவுக்குப் பிறகு, உலகம் பேரழிவை சந்திக்கும் என்ற அவரது கூற்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மலாச்சி கணிப்பு: “பீட்டர்” என்ற பெயருடைய போப் ஒருவரின் ஆட்சி கடைசி ஆட்சி ஆகும்; அதன் பின் ஏழு குன்றுகளின் நகரம் (ரோம்) அழிவைச் சந்திக்கும்.
இந்நிலையில், புதிய போப்பிற்கான முன்னணி வேட்பாளர்களில் ஹங்கேரியைச் சேர்ந்த கார்டினல் பீட்டர் எர்டோ மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்டானியோ டேகல் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் தெரிவாகும் பட்சத்தில், மலாச்சியின் கணிப்பு பூரணமாகும் என்ற அச்சம் சில இடங்களில் எழுகின்றது.

