அம்பாறை – உஹன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திஸ்ஸபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் உஹன, திஸ்ஸபுர பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று, உயிரிழந்த நபர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள வாழைமரத்திலிருந்து வாழைத்தார் ஒன்றை வெட்டச் சென்ற போது காட்டு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உஹனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.