அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியத்தை உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாகத் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 155 விவசாயிகளுக்கு உர மானியமாக வழங்கப்பட்ட 2,934,310 ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த விவசாயிகளின் உர மானியத்துக்கான நிதி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.