பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1750 சம்பளத்தினை ஒரு நாளைக்கு பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் சம்பள உயர்வினை பெருந்தோட்ட கம்பனிகளும் அரசாங்கத்தினால் 200 ரூபா நாளாந்த வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவாகவும் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் இன்று பெருந்தோட்ட அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.
இதனூடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1750 சம்பளத்தினை ஒரு நாளைக்கு பெற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய இன்று குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

