பயணிகள் ரயில் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கீவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயங்கரவாத செயல் என்று கண்டனம் செய்துள்ளார்.
செவ்வாயன்று உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற ரயில் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, உக்ரேனின் தெற்கு துறைமுகமான ஒடேசாவில், ஒரே இரவில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், தாக்குதல் குறித்து ரஷ்யா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. உக்ரேன் பல வருடங்களாக மிகக் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை குறிவைத்து மொஸ்கோ அண்மைய மாதங்களில் அதன் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்ய தாக்குதல்களுக்குப் பின்னர், உக்ரேன் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வெப்பம், மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 2022 பெப்ரவரியில் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார், மேலும் மொஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% காட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

