கல்வி மறுசீரமைப்பிற்கு நாங்கள் எதிர்ப்பில்லை. 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் உள்ளடக்கிய ஆபாச இணைப்புக்கு தான் எதிரப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி மறுசீரமைப்பில் இடம்பெற்ற தவறை ஏற்றுக்கொண்டு மாற்று நடவடிக்கை எடுக்காது அதனை திசைதிருப்பி மறுசீரமைப்பை மேற்கொள்ளவில்லை எனக் கூறுகிறீர்கள்.
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காணப்படும் சிக்கல் காரணமாக 6 ஆம் தர மொடியுல் தொடர்பான புதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிரதமரை ஆபாச வார்ததைகளால் தூற்ற , தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கதைக்க எங்களுக்கு விருப்பமில்லை. மறுசீரமைப்பு என்ற பெயரில் கல்வியை ஆபாசமாகக் கொண்டு செல்லும் நிலையைத் தான் விவாதித்தோம்.
பொய்யைப் பரப்பி தான் இந்த ஆட்சிக்கு வந்தீர்கள் . இலவசக்கல்வியை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்கள். 41 லட்சம் மாணவர்களை அபாயநிலைக்குத் தள்ளும் நிலை தான் கல்வி மறுசீரமைப்பு.
தங்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்கலாம். ஆனால் இந்த நாட்டு விவசாயிகள், மீனவர்களின் பிள்ளைகள் இந்தக் கல்வியை கற்க வேண்டும்.
கல்வி மறுசீரமைப்புக்கு தேவையான உபகரணங்களை வழங்க முடியாதுள்ளது. அவ்வாறு வழங்க முடியாமல் தான் இந்த விவாதத்திற்கு வாருங்கள் என்று குறிப்பிடுகின்றார்கள்.இதனால் இலவசக் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் 41 லட்சம் பிள்ளைகள் கவலையில் உள்ளனர்.
கல்வி நிலைமையை அடிப்படை உரிமையாக மாற்ற கல்வி மறுசீரமைப்புக்கான கொள்கைக்கு இணங்குங்கள்.
நவீனமயமாக்கலுக்கு உலகம் செய்கின்ற வகையில் முன்னோக்கி நகரும் வகையில் உலகத்தின் கல்வித்துறையில் மிகச்சிறந்த நாடாக எமது நாடு இலங்கை என்று மாற்றுவதற்கு உடன்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

