அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்களில் 09 பொது மக்களும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஒருவரும் அடங்கியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் மீதும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றைய நபர் காயமடைந்துள்ள நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
பொண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் வெடிபொருள்களை கொண்ட பெல்ட்களை அணிந்திருந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதுடன், அங்கிருந்தவர்கள் சிதறியடித்து ஓடும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
No Comments1 Min Read

