முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு முன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
