ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (27) ஏற்பட்ட பெரும் மண்சரிவில் 23 பேர் காயமடைந்தனர்.
அனர்த்தத்தில் மேலும், பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் இடைவிடாத மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
ஜம்முவில், பாலங்கள் இடிந்து விழுந்தது, மின் இணைப்புகள் மற்றும் மொபைல் கோபுரங்கள் கடுமையாக சேதமடைந்தன.
மாவட்டம் முழுவதும் தொடர் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை வரை 3,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.