72வது உலக அழகி போட்டியில் (Miss World 2024), இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர வரலாற்று சிறப்புமிக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளார். Head-to-Head Challenge எனும் பிரிவில் 107 உலக அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் தெரிவாகியுள்ள இவர், இலங்கையின் முதல் போட்டியாளராக இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தாய்லாந்து, துருக்கி, லெபனான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த அழகிகளுடன் சேர்ந்து அனுதி, ஆசியா மற்றும் ஓசியானியாவை பிரதிநிதிக்கின்ற முதல் 5 போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்வாகியுள்ளார்.
74 ஆண்டுகால உலக அழகி போட்டியின் வரலாற்றில், Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்வான முதல் இலங்கை அழகியாக அனுதி இடம்பிடித்துள்ளார். இது, இலங்கையின் அழகுப் போட்டி வரலாற்றில் ஒரு முன்னேற்றக் கணிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உலக அழகி போட்டியில் இதுவரை நடைபெற்ற இரண்டு பிரிவுகளிலும் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்ற ஆசியாவின் ஒரே அழகி அனுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பெருமை மிக்க Head-to-Head Challenge இறுதிப் போட்டி இன்று (மே 23) நடைபெறவுள்ளது. இதில் அனுதி குணசேகர தனது திறமையையும், இலங்கை அழகுத் தரத்தையும் உலகிற்கு மெய்ப்பிக்கவுள்ளார்.
இந்த வெற்றிக் பயணத்தில், அனுதி இலங்கையின் பெருமைபோன்ற சின்னமாக மாறியுள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த ஆதரவும் அவரது பின்னணியில் நிற்கிறது.