உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா, நாளை (07) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று, அவர் இலங்கை வரவுள்ளார்.
அதேவேளை சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உலக வங்கி தலைவர் ஒருவரின் முதல் இலங்கை விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

